தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், மின்வாரிய பணியாளர்களை பாதிக்கின்ற முத்தரப்பு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம், பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பார்வைபொறியாளர் அலுவலகம் முன்பு பிப்ரவரி - 23ம் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.
திருச்சி மண்டல செயலாளர் அகஸ்டின் , மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் வட்ட தலைவர் சம்பத் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மின்வாரிய பிரிப்பு - முத்தரப்பு ஒப்பந்தமும் பறிபோகும் சலுகைகளும், உரிமைகளும், மின்வாரிய பணியாளர்களை பாதிக்கின்ற முத்தரப்பு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டச் செயலாளர் பன்னீர் செல்வம், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்ற நல அமைப்பின் வட்ட செயலாளர் ராஜகுமாரன், மாநில துணைத்தலைவர் பஷீர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மணி , கண்ணையன், குமாரசாமி, கண்ணன், இளங்கோவன் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.