தமிழகம் பெரியார் மண் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது - மனோ தங்கராஜ்

இந்த மண் பெரியார் மண் என்பது இந்த உலகத்தில் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. கலைஞர் கண்ட ஜனநாயகத்தை காப்பாற்றும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருக்கும் வகையில் இந்த வெற்றியை தமிழக மக்கள் தந்திருக்கிறார்கள்.கருத்துக்கணிப்புகள் எல்லாம் தவிடு பொடியாகக்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தல் முடிவு வந்திருக்கிறது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

Update: 2024-06-05 03:53 GMT
அமைச்சர் மனோதங்கராஜ்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், கோனம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் 40க்கு 40 என்ற வெற்றியை திமுக கூட்டணி பெற்றிருக்கிறது. இந்த மண் பெரியார் மண் என்பது இந்த உலகத்தில் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. கலைஞர் கண்ட ஜனநாயகத்தை காப்பாற்றும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருக்கும் வகையில் இந்த வெற்றி தமிழக மக்கள் தந்திருக்கிறார்கள்.       கருத்துக்கணிப்புகள் எல்லாம் தவிடு பொடியாகக்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தல் முடிவு வந்திருக்கிறது.

ஜனநாயகத்திற்கு கடுகளவு பாதிப்பு வராது என்பதை நிரூபிக்கும்  வகையில் நாடாளுமன்ற தேர்தலில் நாட்டு மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள்.       வாரணாசியில் கடந்த முறை 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிரதமர் இந்த முறை ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். ஒன்றிய அரசின் மீது மக்கள் மிகப்பெரிய அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவு அறிவித்திருக்கிறது. சிபிஐ, வருமானவரித்துறை போன்ற மத்திய புலனாய்வாய்ப்புகளை வைத்து மோடி அரசு எவ்வாறெல்லாம் மிரட்டியது என்பதை இந்த நாடு அறியும். சந்திரபாபு நாயுடு போன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களும் நன்கு அறிவார்கள். முதல்  அமைச்சர் மு க ஸ்டாலின் கூறியது போல 40 தொகுதிகளும் திமுக கூட்டணி வெற்றி பெற்று இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News