குழந்தைகளுக்கு நுங்குவண்டி தயாரித்து பனை மரம் குறித்து வழிப்புணர்வு

மதுரையில் நுங்கு வண்டி தயாரித்து குழந்தைகளுக்கு பனைமரம் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2024-05-08 02:11 GMT

நுங்கு வண்டி மூலம் விழிப்புணர்வு

மதுரை மாநகர் ஷெனாய் நகர் பகுதியை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் அசோக்குமார். இவர் விதைப்பந்துகள் தயாரிப்பது, மரக்கன்றுகளை நடுதல், பனை விதையை பயன்படுத்தி பொம்மைகள் உருவாக்குவது உள்ளிட்ட இயற்கை சார்ந்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்துவருகிறார். வருங்கால சந்ததியினருக்கு பனைமரத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 90ஸ் கிட்ஸ் குழந்தைகளின் பிரபல விளையாட்டான நுங்கு வண்டிகளை உருவாக்கவைத்து அந்த விளையாட்டு மூலம் பனை விதை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பனைமரத்தில் இருந்து வரும் பனை நுங்கு ஓடுகளை கொண்டு குழந்தைகள் விளையாடும் வகையில் நுங்குவண்டி செய்ய பயிற்சி அளித்தார். இதனை ஆர்வத்துடன் கற்றுக்கொண்ட குழந்தைகள் தாங்களே உருவாக்கிய நுங்கு வண்டிகளை ஓட்டி மகிழ்ச்சியடைந்தனர். குழந்தைகளிடம் பனைவிதை எவ்வாறு கிடைக்கிறது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் , நுங்கு, தகுன், பனைவெள்ளம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, பனம்பழம் என அனைத்துமே மருத்துவகுணம் நிறைந்தவை என்பது குறித்தும் , இயற்கை பேரழிவுளின் போது பாதுகாப்பானது என்பது குறித்தான விழிப்புணர்வுகள் குறித்து சுற்றுசூழல் ஆர்வலர் அசோக்குமார் குழந்தைகளிடம் எடுத்துரைத்தார்.

கோடைக்காலத்தில் குழந்தைகளுக்கு உபயோகமான வகையில் இயற்கை சார்ந்த விழிப்புணர்வை விளையாட்டின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் இந்நிகழ்ச்சியில் ஏராளமான சிறுவர், சிறுமியர் கலந்துகொண்டனர். கிடைக்கும் நேரத்தை செல்போன்களில் மூழ்கி நேரத்தை வீணாக்கும் குழந்தைகளுக்கு இயற்கை சார்ந்து நுங்கு வண்டி செய்ய கற்றுக்கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்வு அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றது.

Tags:    

Similar News