கடையநல்லூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

கடையநல்லூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கபபட்டது.

Update: 2024-01-23 12:46 GMT
பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சாம்பவர்வடகரை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா பேரூராட்சி தலைவர் சீதாலட்சுமிமுத்து தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் பிரபாவதி, பேரூராட்சி துணைத் தலைவர் நாலாயிரம்பாப்பா, திமுக செயலாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் வைத்தியநாதன் வரவேற்றார்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் இலவச சைக்கிள் வழங்கினார். நிகழ்ச்சிகள் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News