விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
இலளிகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் தர்மபுரி எம்.பி செந்தில் குமார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.;
Update: 2024-02-18 06:41 GMT
விலையில்லா மிதிவண்டி
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சட்டமன்றத் தொகுதி நல்லம்பள்ளி ஒன்றியம், இலளிகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் மருத்துவர் டி என் வி செந்தில் குமார் அவர்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா இலவச மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் எல்.எம்.பி.பொன்னுசாமி, தருமபுரி மேற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் குட்டி, தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பி.என்.சி.மகேஷ்குமார், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செ.செல்லதுரை, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியப் பெருமக்கள், கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.