மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்குதல்
புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்களும், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு செயற்கை கால்களை எம்எல்ஏ வழங்கினார்.;
By : King 24x7 Angel
Update: 2024-01-30 10:39 GMT
மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்குதல்
புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்களும், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு செயற்கை கால்களை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ வழங்கினார். நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி நலத்துறை அதிகாரிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.