சாத்தூர் ஆட்டுப்பண்ணையில் ஆடுகள் பொது ஏலம்

சாத்தூர் ஆட்டுப்பண்ணையில் வரும் 30 ஆம் தேதி ஆடுகள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Update: 2024-01-14 08:48 GMT
மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆட்டுப்பண்ணையில் பராமரிக்கப்பட்டு, கழிவு செய்யப்பட்ட வெம்பூர் செம்மறி ஆடுகள் 24 எண்ணம் மற்றும் கன்னி வெள்ளாடுகள் 20 எண்ணம் ஆக மொத்தம் 44 எண்ணம் ஆடுகள் வருகிற 30ஆம் தேதி காலை 11.00 மணியளவில் சாத்தூர் ஆட்டுப்பண்ணையில் வைத்து புத்தகமதிப்புத் தொகையின் அடிப்படையில் பொதுஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

ஆடுகள் அனைத்தும் அறிவியல் தொழில் நுட்பமுறையில் பராமரிக்கப்பட்டு,தரமானமுறையில் வளர்க்கப்பட்டவை ஆகும். எனவே,அவைகளை இனப்பெருக்கத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பும் பொதுமக்கள் முன் தொகையாக ரூ.5000/-க்கான வரைவோலையை வணிகவங்கி மூலம் பெற்று, வருகிற 30.01.2024 அன்று காலை 10.30 மணிக்குள் சாத்தூர் ஆட்டுப்பண்ணை துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.

வங்கி வரைவோலையானது துணை இயக்குநர், ஆட்டுப்பண்ணை, சாத்தூர் (Deputy Director of Animal Husbandry, Sheep farm, Sattur) என்ற முகவரிக்கு எடுக்கப்பட வேண்டும். முன்தொகை வங்கி வரைவோலையாக மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். இது தொடர்பான விவரங்கள் தேவைப்படுவோர் சாத்தூர் ஆட்டுப்பண்ணை துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 73057- 08658 என்ற கைப்பேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.ஏலம்தொடர்பான நிபந்தனைகள் மற்றும் விபரங்கள் சாத்தூர் ஆட்டுப்பண்ணை தகவல் பலகையில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே,பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஏலத்தில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News