பல்லடம் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பல்லடம் எம்சிஆர் நகர் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை போராட்டம்;
By : King 24x7 Website
Update: 2023-12-13 17:25 GMT
பல்லடம் எம்சிஆர் நகர் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை போராட்டம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி அலுவலகத்தை சி.எம் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சி எம் நகர் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்லாத வகையில் நகராட்சி நிர்வாகம் தடுப்பு அமைத்து இருப்பதாக கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.