அம்மா பூங்கா சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை !
திருப்புலிவனம் ஊராட்சியில் அம்மா பூங்காவை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-07 06:05 GMT
அம்மா பூங்கா
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் ஊராட்சியில், 2018ல், 30 லட்சம் ரூபாய் செலவில், அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டது. இங்கு, குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம், நடைபயிற்சிக்கான நடைபாதை, இளைஞர்களுக்கான உடற்பயிற்சி சாதனங்கள் உள்ளன. ஆண், பெண்களுக்கான தனி கழிப்பறையும் கட்டப்பட்டுள்ளது. இப்பகுதியினர் பூங்காவை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கொரோனா ஊரடங்குக்குப் பின் பூங்காவை முறையாக பராமரிக்கவில்லை. இருக்கைகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஆண்களுக்கான உடற்பயிற்சி சாதனங்கள் பழுதடைந்துள்ளன. பூங்கா பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.