சேதமடைந்த பாம்பாற்றுப்பாலம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

சேதமடைந்த பாம்பாற்றுப்பாலம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

Update: 2024-04-30 05:29 GMT

பாம்பாற்று பாலம் 

திருமயம்:காரைக்குடி திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமயம் அருகே அமைக்கப்பட்டுள்ள பாம்பாற்று பாலத்தின் இடது புற தடுப்புச் சுவர் வாகனம் மோதி சேதமடைந்தது. இந்த பாலம் வழியாக தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்றுவரும் நிலையில், ஆபத்தை உணராத நெடுஞ்சாலை துறையினர் சேதமடைந்த பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். மேலும், பாலம் குறுகலாகவும் உள்ளது. விபத்து ஏற்படும் முன்பு சாலையின் அகலத்துக்கு ஏற்ப புதிய பாலம் கட்ட அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய பாஜ தலைவர் முருகேசன் மற்றும் அப்பகுதி மக்கள், வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News