சிவாடியில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சிவாடி கிராமத்திற்குச் செல்லும் தார் சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-07-01 10:24 GMT

சேதமடைந்த சாலை 

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே, கெங்கலாபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் பிரிவு சந்திப்பு சாலையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் சிவாடி கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் 8000-க்கு மேற்பட்ட வீடுகள் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த கிராமத்திற்கு வரும் தார் சாலை ஆனது முற்றிலுமாக பெயர்ந்து ஆங்காங்கே கற்கள் கரடு முரடாக இருப்பதால் பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருவதற்கும் பேருந்து செல்வதற்கும் மிகவும் சிரமமாக இருக்கிறது அதுமட்டுமில்லாமல் இந்த சாலை சிவாடி முதல் ரயில் நிலையம் வரை செல்வதால் தார்சாலை ஜல்லிக்கற்க்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக மாறியுள்ளது, இச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர், பழுதான இந்த தார்சாலையால் இரவு நேரங்களில் சென்று வரும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறும் நிலையில் இருந்து வருகின்றனர், எனவே சாலையை சீர்செய்யக்கோரி, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி, சம்மந்தப்பட்ட சாலையை சீர்செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது.
Tags:    

Similar News