விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-02-15 11:55 GMT
தென்காசி மாவட்டம், இலத்தூர் இ.விலக்குபகுதியில் சென்டர் மீடியனில் ஐந்தாவது முறையாக லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இது குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்ற சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின் பேரில் தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் மற்றும் தென்காசி போக்குவரத்து ஆய்வாளர் மணி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முத்துராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்கள் நடக்கா வண்ணம் அதனை தடுக்கும் பொருட்டு இரண்டு இடங்களில் வேகத்தடைகள் மைப்பதற்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆலோசனைகள் வழங்கினார்.இன்னும் ஓரிரு நாளில் அந்த இடத்தில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.