திருத்தணியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
திருத்தணியில் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி இருந்து அரக்கோணம் செல்லும் மாநில நெடுஞ்சாலை, திருத்தணி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு போக்குவரத்து பணிமனை வரை, 200 மீட்டர் துாரத்திற்கு நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்கம் பணிகள் மேற்கொண்டுள்ளனர்.
இதற்காக சாலையின் இருபுறமும் சாலை விரிவாகத்திற்கு தார்ச் சாலையோரம் பள்ளம் இரண்டு மாதங்களுக்கு முன்பு தோண்டி, தோண்டப்பட்டது. ஆனால் பள்ளத்திற்கு ஜல்லிகற்கள் கொட்டி, பேவர் பிளாக் சாலை அமைக்காமல் திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில் கடைகள் வைத்திருக்கும், 25க்கும் மேற்பட்டோர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கண்டித்து ஆர்பாட்டம் செய்தனர். அப்போது கடைக்காரர்கள் பள்ளம் தோண்டி இரு மாதங்களுக்கு மேல் ஆகியும் சாலை அமைக்காமல் மெத்தனம் காட்டி வருவதால், எங்களின் வாழ்வதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் பத்து நாட்களில் சாலை அமைக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என கோஷம் எழுப்பினர்.