கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுவிநியோக சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டம் சம்மந்தமாக பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 15ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல்,
நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு கீழ் குறிப்பிட்ட கிராமங்களில், 15.06.2024 (சனிக்கிழமை) அன்று (காலை 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை) பொதுவிநியோகத்திட்டம் சம்மந்தமாக பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படும்.
ஆட்சியர் தகவல் பொதுவிநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் நடைபெறும் கிராமங்கள் கிருஷ்ணகிரி- பகுதிக்கு உட்பட்ட செம்படமுத்தூர் பர்கூர்- (பாசிநாயனப்பள்ளி தரப்பு)குண்டலானூர் போச்சம்பள்ளி- (புளியம்பட்டி தரப்பு) பாப்பாரப்பட்டி ஊத்தங்கரை- (காட்டேரி தரப்பு) அனுமந்தீர்த்தம் ஓசூர்- (ஈச்சங்கூர் தரப்பு) சொக்கரசனப்பள்ளி சூளகிரி- (உலகம் தரப்பு) கூலியம்
தேன்கனிக்கோட்டை-(மல்லசந்திரம் தரப்பு) அலேநத்தம் அஞ்செட்டி- தக்கட்டி எனவே, மேற்படி குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன்பெறுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தெரிவித்துள்ளார்.