மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 315 மனுக்கள் பெறப்பட்டன.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் மக்ஙகுறைதீர் முகாம் ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், கோரி 53 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 46 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகைகோரி 46 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 37 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 31 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 42 மனுக்களும், நில அபகரிப்பு தொடர்பாக 12, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வேண்டி 48 மனுக்களும் மொத்தம் 315 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.4250 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி மணிமேகலை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜகணேசன், மற்றும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பானுகோபன் மற்றும் மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பு. ரவி மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் டீ.சுரேஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.