திருப்பூரில் தேர்தலை புறக்கணிக்க போவதாக பொது மக்கள் தகவல்
திருப்பூரில் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்த சின்னக்கம்பாளையம் பொது மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
பேட்டி : தங்கவேல் , சின்னக்காம்பாளையம் தாராபுரம் அருகே கோழிப்பண்ணையால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டின் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டிக்கும் வகையில் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்த பொது மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவிற்குட்பட்ட சின்னக்கம்பாளையம் ஆறாவது வார்டில் செயல்படும் தனியார் தாய் கோழிப்பண்ணையால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
இந்த மனுவின் மீது கால்நடை பராமரிப்பு துறை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் கால்நடை பராமரிப்பு மண்டல இயக்குனர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் கோழிப்பண்ணை செயல்படும் இடத்தில் இருந்து 500 மீட்டருக்குள் குடியிருப்புகள் இல்லை என அறிக்கை தந்ததால் சுகாதார சீர்கேட்டின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து வருகிறது எனவும் , எனவே தங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் குடியிருப்புகளே இல்லை என அறிக்கை தந்த அதிகாரிகளை கண்டிக்கும் வகையில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை 57 குடும்பத்தினரும் புறக்கணித்து தங்களது வாக்காளர் அடையாள அட்டை ஆதார் கார்டு ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கிறோம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.