பெரம்பலூரில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

பெரம்பலூரில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.;

Update: 2024-01-26 12:15 GMT

பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் தமிழ் மொழிப்போர் தியாகிகளுக்கு நன்றி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் பெரம்பலூர் மேற்கு வானொலி திடலில் ஜனவரி 25ஆம் தேதி இரவு 8 மணியளவில் நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட செயலாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான வளர்மதி மற்றும் கட்சியின் தலைமை பேச்சாளர் அருணாச்சலம் உட்பட முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏ மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு பேசினர்.

இதில் தமிழ் மொழிக்காக போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவு கூறும் வகையில் பேசிய நிர்வாகிகள் தொடர்ந்து ஆளும் திமுக அரசின் செயல்பாடுகளை குறை கூறி பேசினர். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு அதிக வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News