விசிக சார்பில் தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம்
விசிக தேர்தல் களத்தில், வெள்ளிவிழா ஆண்டு மற்றும் வெல்லும் சனநாயகம் மாநாட்டின் 33-வது தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் களத்தில், வெள்ளிவிழா ஆண்டு மற்றும் வெல்லும் சனநாயகம் மாநாட்டின் 33 வது தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மார்ச் 9ஆம் தேதி இரவு 8 மணி அளவில் நடைபெற்றது.
பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரத்தினவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர செயலாளர் சண்முகசுந்தரம் வரவேற்புரை ஆற்றினார், மாவட்டத் துணைச் செயலாளர் கிருஷ்ணகுமார் , மாவட்ட செய்தி தொடர்பாளர் உதயகுமார், பெரம்பலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர், பிச்ச பிள்ளை பெரம்பலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், வேப்பந்தட்டை மேற்க்கு ஒன்றிய செயலாளர் வெற்றியழகன் வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் இடிமுழக்கம் ஆகியோர் முன்னிலை வகித்த நிகழ்ச்சியில் விசிக சட்டமன்ற குழு தலைவரும்,
பொது செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைச் செல்வன் மற்றும் முதன்மைச் செயலாளர் பாவரசு, மண்டல செயலாளர் அன்பானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு தீர்மான விளக்க உரையாற்றினார்கள்.
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கூட்டணியில்இடம் முக்கியமில்லை கொள்ளை தான் முக்கியம் என்றும் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் குறிப்பிட்டுள்ள செய்திகள் குறித்தும் மேலும் வெல்லும் சனநாயகம் மாநாட்டின் தீர்மானங்கள் குறித்தும் எடுத்துரைத்து பேசினார்கள்.
இந்நிகழ்ச்சியில் விசிக கட்சியின் விவசாய அணி மாநில செயலாளர் வீர செங்கோலன், முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி துணைச் செயலாளர் மன்னர் மன்னன், மண்டல துணைச் செயலாளர்கள் ஸ்டாலின், லெனின், மாறன், மாநிலத் துணைச் செயலாளர்கள் ,ராசித் அலி, தமிழ் குமரன், அண்ணாதுரை, பிரேம்குமார், மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் அய்யாக்கண்ணு, முரசொலி, பழனிவேல் ராஜன், செந்தில்குமார், ஸ்டாலின், அய்யம்பெருமாள்,
பாலன், மகாதேவன், மனோகரன், உள்ளிட்ட மாவட்ட துணை அமைப்பாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள் நகரப் பொறுப்பாளர்கள், பேரூர் பொறுப்பாளர்கள், உள்ளிட்ட விசிகவை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர் இறுதியாக மாவட்டத் துணை அமைப்பாளர் மணிமாறன் நன்றி உரையாற்றினார்.