மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

திருவண்ணாமலையில் பணத்தை மீட்டு தரக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் .

Update: 2024-06-28 15:15 GMT

பணத்தை மீட்க மனு

திருவண்ணாமலை அடுத்த ஏந்தல் கிராமத்தில் உள்ள நம்மாழ்வார் அக்ரோ ஃபார்ம் என்ற நிறுவனம் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகளிடம் இருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து, பாக்கி தொகை தர மறுத்துள்ளது. இந்நிலையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Tags:    

Similar News