சங்கரன்கோவிலில் பொதுமக்கள் போராட்டம் - போக்குவரத்து ஸ்தம்பிப்பு
Update: 2023-12-04 07:35 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகர் மற்றும் கக்கன் நகரில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். தங்களுக்குரிய இடத்தை கழிப்பிடம் என்று கூறிய தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சங்கரன்கோவில் நகராட்சியை கண்டித்து நேற்று காலை நேரடித் திடலில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருந்தனர். இதனால் இன்று காலையில் முதல் கழுகுமலை சாலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு காந்திநகர் பொட்டல் மைதானத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடினர். கூடிய பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலமாக செல்ல முயன்று அவர்களை கழுகுமலை சாலையில் போலீசார் தடுத்தனர். அப்போ பொதுமக்களுக்கும் போலீசார்க்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தள்ளுமுள்ளு போராட்டம் 45 நிமிடம் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் காந்திநகர் மற்றும் தக்க நகரை சேர்ந்த பொதுமக்கள் குமரன் தெரு பழைய தாலுகா ஆபிஸ் வழியாக கச்சேரி ரூட்டை வந்தடைந்து தேரடி திடலில் தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பஸ்கள் அனைத்தும் மாற்று பாதையில் திருப்பி அனுப்பப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தால் சங்கரன்கோவில் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.