வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்
தலைவன்கோட்டை கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்கக்கோரி வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம் நடந்ததினர்.
Update: 2024-05-10 09:13 GMT
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே தலைவன்கோட்டை கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்கக்கோரி யூனியன் கவுன்சிலர் விஜயபாண்டியன் தலைமையில் கிராம பொது மக்கள் காலி குடங்களுடன் சென்று வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலகத்திற்கு முன்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து முறையாக குடிநீர் வழங்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்கப்படும் என அதிகாரியில் பேச்சுவார்த்தை நடத்தினார் அதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.