திருநெல்வேலியில் மக்கள் தொடர்பு முகாம்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைப்பெற்றது.
Update: 2024-03-06 02:10 GMT
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்திற்கு உட்பட்ட விஜயாபதியில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நேற்று (மார்ச் 5) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில் ஐயா வைகுண்டர், கால்டுவெல் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது தவறு என பரபரப்பாக பேசினார்.