மயிலாடுதுறை அருகே காளி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்

மயிலாடுதுறை அருகே காளி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாமில் ரூ. 29 இலட்சத்து 35 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது;

Update: 2023-12-30 09:44 GMT

நலதிட்ட உதவிகள் வழங்கல்

மயிலாடுதுறை அருகே காளி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி , மயிலாடுதுறை எம்.பி., ராமலிங்கம் மயிலாடுதுறை எம்எல்ஏ.ராஜகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ரூ. 29 இலட்சத்து 35 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது, அரசை தேடி மக்கள் என்ற நிலை மாறி, மக்களை தேடி தமிழ்நாடு அரசே முன்வந்து அவர்களின் கோரிக்கைகளை பெற்று தீர்வு காணும் வகையில் தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

Advertisement

தற்போது நகராட்சி,பேரூராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் உடனடி தீர்வாக அல்லது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். பல்வேறு திட்டங்கள் உள்ளவற்றை பொதுமக்கள் இவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார். . இன்றைய தினம், மொத்தம் 86 பயனாளிகளுக்கு ரூ. 29 இலட்சத்து 35 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் .மணிமேகலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் .சத்தியசீலன் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா , மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News