மேலத்தானியத்தில் மக்கள் தொடர்பு முகாம்
புதுக்கோட்டை மாவட்டம், மேலத்தானியத்தில் வருவாய்த்துறை சார்ப்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
பொன்னமராவதி அருக உள்ள மேலத்தானியத்தில் வருவாய்த்துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை வகித்து வருவாய்த்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உட்பட பல்வேறு துறை களின் சார்பில் 502 பயனாளிகளுக்கு ரூ. ஒரு கோடியே 31 லட்சத்து 47 ஆயிரத்து 847 மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து மேலத் தானியம் ரேஷன் கடையில் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். அங்கன் வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.
வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி,இலுப்பூர் ஆர்டிஓ தெய்வநாயகி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர் பாஷா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஸ்ரீதர், சுகா தாரப்பணிகள் துணை இயக்குனர் ராம்கணேஷ், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் திரிபுரசுந்தரி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் புவனேஸ்வரி உட்பட பல்வேறு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.