சுற்றி தெரியும் நாய்களை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
சங்கரன்கோவில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
Update: 2024-05-13 09:01 GMT
சங்கரன்கோவில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரப் பகுதிகளில் நாய்கள் அதிகமாக சுற்றித் திரிவதால் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர். இதனால் காந்திநகர், கீதாலயா தியேட்டர் சாலை, திருவேங்கடம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக நாய்கள் சுற்றுகிறது நகராட்சியிடம் பல கோரிக்கை மனு வழங்கியும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு அந்த பகுதியில் உள்ள சுற்றி தெரியும் நாய்களை உடனே பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.