புடவைக்காரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
நாமக்கல் மாவட்டம், அள்ளாலபுர கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
எலச்சிபாளையம் ஒன்றியம், பொம்மம்பட்டி கிராமம், அள்ளாலபுரத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் விநாயகர், புடவைக்காரியம்மன், வீரகாரன், எல்லம்மாள், லிங்கம்மாள், கன்னிமார் சுவாமிகள் கோவிலில் நேற்று கும்பாபிசேகவிழா நடந்ததையொட்டி, நேற்றுமுன்தினம் காலை 6மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா ஆரம்பமானது. தொடர்ந்து, தீர்த்தம் எடுத்து வருதல், புன்யாகம், வாஸ்துபூஜை, யாகசாலை பிரவேசம், வேதிகார்சனை, முதல்காலம் நிறைவு உள்ளிட்ட நிகழ்சிகள் நடந்தது.
நேற்று காலை 5மணிக்கு இரண்டாம்கால யாகபூஜை, விநாயகர் வழிபாடு, திரவிய ஹோமம் நடந்தது. தொடர்ந்து காலை 7;30மணிமுதல் 9மணிக்குள் விநாயகருக்கும், புடவைக்காரியம்மனுக்கும் மகாகும்பாபிசேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து, 9மணிமுதல் 10மணிக்குள் காட்டுக்கோவில் வீரகாரன் சுவாமிக்கு மகாகும்பாபிசேகம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.