புதுமைப்பெண் திட்டம் : அரசு பள்ளி மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

தர்மபுரி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற அரசு பள்ளி யில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-25 02:42 GMT

மாவட்ட ஆட்சியர் சாந்தி 

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டமானது 2022-2023ம் ஆண்டு முதல் தமிழ்நாட் டில் அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து மேற்படிப் பில் சேரும், அனைத்து மாணவிகளுக்கும் பட்ட படிப்பு, பட்டய படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற் றில் இடையில் நிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் 1000 வீதம் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அரசாணையில் 2024 - 2025ம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை, தமிழ் வழிக் கல்வி யில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து, மாணவிகளுக்கும் இத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.மேற்படிப்பிற்காக பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் சேரும் அனைத்து மாணவிகளும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது அஞ்சல் அலுவலகத்தில் புதிய கணக்கு தொடங்கி, உங்கள் கல்லூரியில் நியமிக்கப்பட்ட புதுமை பெண் திட்ட கல்லூரி நோடல் அலுவலர் மூலம் www. puthumaipenn.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இத்திட்டத்தின் மூலம், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளும், தங்கள் கல்வியை தொடரவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு மாவட்ட சமுக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட வளாகம், தர்மபுரி - 636705 மற்றும் தொலைபேசி : 04342-233088 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Tags:    

Similar News