சர்வதேச கராத்தே போட்டியில் புதுகை மாணவர் பங்கேற்பு!
புதுக்கோட்டையிலுள்ள கற்பக விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் எஸ். யாசர் அராபத், மலேசியாவில் மே 6-ஆம் தேதி நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்கவுள்ளார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-09 05:32 GMT
நன்கொடை
புதுக்கோட்டையிலுள்ள கற்பக விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் எஸ். யாசர் அராபத், மலேசியாவில் மே 6-ஆம் தேதி நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்கவுள்ளார்.இதையொட்டி, மாணவரை நேரில் அழைத்து வாழ்த்திய பள்ளியின் செயலர் நா.சுப்பிரமணியன் மற்றும் அறங்காவலர் கவிதா சுப்பிரமணியன் ஆகியோர் போக்குவரத்துச் செலவுக்கான நன்கொடையாக பள்ளியின் சார்பில் ரூ. 20 ஆயிரத்தை வழங்கினர் (படம்). அப்போது பள்ளியின் முதல்வர் இ. ஷானுரேஷ்வான் உடனிருந்தார்.