நகராட்சிக்கு வாடகை செலுத்தாத ஆறு கடைகளுக்கு சீல் வைப்பு!
வாடகை தராத கடைகளுக்கு சீல் வைத்து அதிரடி காட்டிய நகராட்சி நிர்வாகம்
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான வாடகை கடைகளில் வாடகை செலுத்தாத காரணத்தினால் ஆறு கடைகளுக்கு சீல் வைத்தனர்.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளை நகராட்சி நிர்வாகம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் மருந்து செல்போன் உறுதிபகங்கள், பூக்கடைகள். இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் நிலையம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக வாடகை கட்டவில்லை எனக்கூறி நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் கடையநல்லூர் புகுந்து அங்கு உள்ளவர்களை வெளியேற்றி ஆறு கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்கையில் நீங்கள் ஆறும் நான்கு மாதம் கடை பாக்கி வைத்துள்ளீர்கள் அதனையும் வரும் மார்ச் மாதம் வரை வாடகையை கட்டினால் மட்டுமே கடைகளில் திறக்க முடியும் எனக் கூறினார். இந்த நடவடிக்கை குறித்து வாடகை கடை வைத்திருக்கு முத்துக்குமார் என்பவர் தெரிவிக்கையில் நாங்கள் இந்த கடையில் நெடுங்காலமாக இருந்து வருகின்றோம் என்றும் நகராட்சிகள் சேர்த்த வேண்டிய வாடகையை இதுவரை பாக்கியின்றி செலுத்தி வருகிறோம் என்றார்.
மேலும் தற்பொழுது 4 மாதம் மட்டும் வாடை பாக்கி உள்ளது அதனை ஒரு மணி நேரத்தில் கட்டி விடுகிறோம் கடையை திறந்து விடுங்கள் என கூறினோம் ஆனால் நகராட்சி நிர்வாகம் அது முடியாது வரும் மார்ச் மாதம் வரை அதாவது அடுத்த மாதம் வரை வாடகையை கட்டி விடுங்கள் என கரராக கூறி குண்டர்களை வைத்து எங்களை வெளியே அனுப்பி உள்ளார்கள் என்றார். இதனால், தற்போது கடைகள் பூட்டப்பட்டுள்ளது உடனடியாக கடைகளை திறக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.