உசிலம்பட்டி அருகே கோலாகலமாக நடைபெற்ற பூக்குழி திருவிழா!
உசிலம்பட்டி அருகே பூக்குழி திருவிழா கோலாகலமாக. நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-24 10:06 GMT
பூக்குழியில் இறங்கிய பக்தர்கள்
மதுரை-உசிலம்பட்டி உசிலம்பட்டி அருகே பூக்குழி திருவிழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அருகே உள்ள சீல்நாயக்கன்பட்டி, அல்லமநாயக்கன்பட்டி கிராம ஐயப்ப சேவா சங்கம் நடத்தும் 3ம் ஆண்டு பூக்குழி பெருந்திருவிழா நடைபெற்றது.முன்னதாக பக்தர்கள் 48நாள் விரதமிருந்தனர்.திருவிழா நாளன்று ஐயப்பன் ராஜ அலங்காரத்தில் ஊர் முழுவதும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்பு ஊர் மந்தை முன் பூக்குழி அமைத்து விரதம் இருந்த பக்தர்கள் ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இதில் ஏராளமான கிராம. மக்கள் கலந்து கொண்டனர்.