புதிய கட்டிடங்களை திறந்து வைத்த புகழேந்தி எம்.எல்.ஏ.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் ரூ.1 கோடியில் அரசு புதிய கட்டடங்களை புகழேந்தி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

Update: 2024-03-14 04:40 GMT

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் ரூ.1 கோடியில் அரசு புதிய கட்டடங்களை புகழேந்தி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடை, அங்கன்வாடி கட்டிடங்கள், குடிநீர் தொட்டிகள் போன்றவை திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயசந்திரன் தலைமை தாங்கினார்.

ஒன்றிய குழு தலைவர் சங்கிதாஅரசி ரவிதுரை, துணை தலைவர் ஜீவிதா ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புகழேந்தி எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விக்கிரவாண்டி ஒன்றியம் எண்ணாயிரம் ஊராட்சியில் ரூ.38 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையம், பிரம்மதேசம் ஊராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பில் கட்டப் பட்ட நீர்த்தேக்க தொட்டி, நேமூர் ஊராட்சியில் 17 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், அண்ணா நகர் பகுதிநேர ரேஷன் கடை, தென் பேர் ஊராட்சியில் ரூ 14 லட் சத்து 59 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம், பூங்குனம் ஊராட்சியில் ரூ.9 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் ரேஷன் கடை கட்டிடம் ஆகியவற்றை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும், 124 பேருக்கு இலவச மனை பட்டா உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

Tags:    

Similar News