தகுதிசுற்று சதுரங்க போட்டி - ஆர்வமுடன் பங்கேற்ற சுட்டீஸ்!

வேப்பூரில் நடந்த மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகளில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

Update: 2024-03-26 04:07 GMT

சதுரங்க போட்டி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூரில் உள்ள குளோபல் பப்ளிக் பள்ளியில் மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டி நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியை குளோபல் பள்ளியின் தாளாளர் ராம்பிரசாத் வேதுலா தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் சிவ சுப்பிரமணியம், பள்ளி துணை முதல்வர் மீனாட்சி சுந்தரம், ராணிப்பேட்டை மாவட்ட சதுரங்க கழக செயலர் அப்துல் கரீம், சோழவந்தான், சரவணன், முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News