'காலண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம்"
'காலண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம்";
By : King 24x7 Website
Update: 2023-12-22 16:33 GMT
'காலண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம்"
நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர்களின் நலன் கருதி அனைத்து துறையின் முதல் நிலை அலுவலர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆகியோர்களுடன் 2023 ஆம் ஆண்டிற்கான நான்காவது 'காலண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம்" நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில் 27.12.2023 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. அதுசமயம் பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள் மேற்படி கூட்டத்தில் கலந்துகொண்டு மனுக்களை அளிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.