தெலுங்கில் யுகாதி வாழ்த்து கூறி வாக்கு சேகரித்த ராதிகா சரத்குமார்
சாத்தூரில் தேர்தல் பிரச்சாரம் செய்த பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் தெலுங்கில் யுகாதி வாழ்த்துக்களை தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பிஜேபி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராதிகாசரத்குமார் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னகாமன்பட்டி மேட்டமலை, வெங்கடாசலபுரம், சாத்தூர், முக்குராந்தல் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சின்னகாமன்பட்டி, வெங்கடாசலபுரம் ஆகிய பகுதிகளில் பேசிய ராதிகா சரத்குமார் அனைவருக்கும் யுகாதி வாழ்த்துக்களை தெலுங்கில் தெரிவித்து நலம் விசாரித்தார்.
பின்னர் சாத்தூர் பகுதியில் பட்டாசு தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பட்டாசு தொழில் குறித்த வழக்கு முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும் அதன் தீர்ப்பு பட்டாசு தொழிலை உயர்த்தி நிலை நிறுத்தி மேம்பட வழி வகை செய்யும் வகையில் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் அதிமுகவில் பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் தேர்தலை சந்தித்துள்ளது அதிமுகவை பொருத்தவரை முடிவு தெரியாமல் கேள்விக்குறியே முதன்மையாக முன்னிறுத்தி பெயர்களை சந்திக்கிறது என்றார்.
எங்களுக்காவது மோடி இருக்கிறார் என தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் பேசிய சரத்குமாரும் அனைவருக்கும் யுகாதி வாழ்த்துக்களை தெலுங்கில் தெரிவித்து அனைவரிடம் நலம் விசாரித்தார். இதனால் பிஜேபியின் கட்சியின் கூட்டணி கட்சி மற்றும் பொதுமக்களிடையே சிறிது முகம் சுழிப்பை ஏற்படுத்தியது.