கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்பத் திருவிழா
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நேற்று துவங்கிய தெப்பத் திருவிழாவில் தெப்ப உற்சவம் வரும் 5ம் தேதி நடக்கிறது.;
கமலவல்லி நாச்சியார்
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் உப கோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் 108 வைணவத் தலங்களில் இரண்டாவது தலமாகவும் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும் திருப்பாணாழ்வார் அவதித்த திருத்தலமாகவும் விளங்குகிறது. இக்கோவிலில் தெப்பத் திருவிழா நேற்று தொடங்கியது.
முதல் நாளான நேற்று நாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு தெப்ப மண்டபத்தில் எழுந்தருளினார். இரவு 8:15 மணி வரை பக்தர்களுக்கு கட்சி அளித்தவர் அங்கிருந்து இரவு எட்டு முப்பது மணிக்கு புறப்பட்டு 8. 45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இதேபோல் வருகிற ஏழாம் தேதி வரை தினமும் ஒரு அலங்காரத்தில் தாயார் வெப்பம் மண்டபத்தில் எழுந்தருள்வார். முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் வருகிற ஐந்தாம் தேதி இரவு நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருளும் தயார் இரவு 8 மணி வரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். நிறைவு நாளான ஆறாம் தேதி பந்தக்கட்சி நடக்கிறது