விராலிமலையில் பலத்த மழை

விராலிமலையில் நேற்று மாலை பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல ஓடியது.

Update: 2024-05-21 04:00 GMT
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, இலுப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால், பெரியவர்கள், சிறியவர்கள் வயது முதிர்ந்தோர் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். இந்நிலையில், நேற்று  மாலை 4.30மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. ஒரு மணிநேரத்துக்கும் மேலாகப் மழையால் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. விராலிமலையில், மூன்றாவது நாளாகத் தொடர்ந்து மழை பெய்து வருவது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
Tags:    

Similar News