மீனாட்சிப்பேட்டை சாலையில் ஓடும் மழைநீர்

கடலூர் மாவட்டம், மீனாட்சிப்பேட்டை சாலையில் ஓடும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

Update: 2024-05-23 05:25 GMT

சாலையில் ஓடிய மழைநீர் 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி - நடுவீரப்பட்டு செல்லும் சாலையில் இன்று மதியம் கனமழை பெய்தது. இந்த நிலையில் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் மெதுவாக சென்றனர். மழையினால் அப்பகுதியில் குளிர்ந்த சூழ்நிலை நிலவுகிறது.
Tags:    

Similar News