ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேக்கம் - மக்கள் அவதி
சுரங்கப்பாதையில் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை;
சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம்
ஆரணி அருகே ரயில்வே சுரங்கபாதையில் மழைநீர் தேக்கம். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அம்மாபாளையம் கிராமத்தில் சாலையில் ரயில்வே சுரங்க பாதை அமைந்துள்ளன.
தற்போது சென்னை வேலூர் திருவண்ணாமலை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 4 நாட்களாக பலத்த கனமழை பெய்து வருகின்றது. மேலும் ஆரணி பைபாஸ் சாலையில் உள்ள தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன.
இதனையடுத்து, ஆரணி அருகே அம்மாபாளையம் ரயில்வே சுரங்கபாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளன. அம்மாபாளையம் வேலூர் சாலையில் சுற்றி செல்ல சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் அதிகளவில் சுற்றி செல்ல நேரிடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் ரயில்வே சுரங்கபாதை அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.
இதனால் பெரும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் உடனடியாக ஊராட்சி நிர்வாகம் சுரங்க பாதையில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.