சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் ஒரு சில பகுதிகளில் பலத்த மழையும் பெய்தது.;

Update: 2024-07-04 03:08 GMT
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை.

சென்னையில் மழை 

  • whatsapp icon
சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வரக்கூடிய நிலையில் வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசியது . கோயம்பேடு, முகப்பேர், போரூர், மதுரவாயில், வானகரம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அதே போல் சென்னை மற்றும் புறநகரில் காற்றுடன் மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, ஆவடி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம், காட்டுப்பாக்கம், மாங்காடு ,மதுரவாயல், நெற்குன்றம், வானகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் லேசான மழை பெய்தது.
Tags:    

Similar News