நாலுமுக்கு பகுதியில் அதிகபட்ச மழை பதிவு

திருநெல்வேலி மாவட்டம்,நாலுமுக்கு பகுதியில் 103 மிமீ மழை பதிவாகியுள்ளது.

Update: 2024-05-24 08:09 GMT

மழை

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.இந்த நிலையில் மொத்தமாக இன்று (மே 24) காலை 8 மணி நிலவரப்படி 464.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 103 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Tags:    

Similar News