ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா இன்று தொடக்கம்
ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.;
பைல் படம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 12ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆண்டு திருவிழாவை ஜெப ஆண்டாக கொண்டாடுகிறார்கள். முதலாம் நாளான இன்று மூன்றாம் தேதி காலை 5:30 மணிக்கு திருப்பலி உடன் விழா தொடங்கியது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு திருக்கொடி பவனி. 6. 15 மணிக்கு ஜெபமாலை, திருக்கொடியேற்றம் மற்றும் திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ் தாஸ் தலைமையில் மறையுரை நடைபெறுகிறது. விழாவை அனைத்து அன்பியங்களை சேர்ந்தவர்கள் சிறப்பிக்கின்றனர். இரவில் அன்பிய ஆண்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.தொடர்ந்து அனைத்து நாட்களிலும் தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை ஆராதனை, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.