கோவில் திருவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ரஜினி ரசிகர்கள்

கௌரி செட்டிப்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் மற்றும் முனியப்ப சாமி ஆனி மாத திருவிழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் ரஜினி ரசிகர்கள் வழங்கினர்.

Update: 2024-06-20 07:47 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கௌரி செட்டிப்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் மற்றும் முனியப்ப சாமி ஆனி மாத திருவிழா நடைபெற்றன. இந்த திருவிழாவில், அன்பு தலைவர் ரஜினிகாந்த் குழு பெங்களூர் சார்பாக ரஜினிகாந்த் நலன் வேண்டியும் ரசிகர்களின் குடும்பத்தார் நலன் வேண்டியும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் பெண்களுக்கு சில்வர் குடமும் ஆண்களுக்கு வேஷ்டி துண்டும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அன்பு தலைவர் ரஜினிகாந்த் குரூப் பெங்களூர் மரியநாதன் கிருஷ்ணமூர்த்தி,ரஜினி, வேலு, முத்து, டாக்டர் சங்கர், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News