ராமநாதபுரம்;110 வயது மூதாட்டி உயிரிழப்பு

ராமநாதபுரம் அருகே 4 தலைமுறையை கடந்த 110 வயது பாட்டி உயிரிழந்த நிலையில், கிராம மக்கள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர்.

Update: 2024-06-06 05:20 GMT

ராமநாதபுரம் அருகே 4 தலைமுறையை கடந்த 110 வயது பாட்டி உயிரிழந்த நிலையில், கிராம மக்கள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர்.  

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட வழுதூர் கிராமத்தில் வசித்து வந்தவர் விவசாயி, தவசி இவரின் மனைவி பேச்சிமுத்தம்மாள் 1914 ஆம் ஆண்டு பிறந்தவர் இவர் நாட்டுப்புற பாடல்கள் பாடுவது கதை சொல்லுவது இவரின் இயல்பான தனிச்சிறப்பாகும் கடுமையாக உழைப்பது இளம் வயதினருக்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் 110 வயது வரை நல்ல திடகாத்திரமாக வாழ்ந்து மறைந்தார்.

இவரின் பழமையான உணவு வகைகள் இவரை ஆரோக்கியமாக நீண்ட நெடிய நாள் வாழ்வதற்கு உந்து சக்தியாக இருந்தது இவர் நான்கு தலைமுறையை கண்டவர் பாம்பன் பாலம் முதன் முதலில் கட்டும்போது கட்டுமான கூலி தொழிலாக பணியாற்றியுள்ளார் ஆரோக்கியமாக 110 ஆண்டுகள் சிறப்பாக வாழ்ந்த மூதாட்டி உணவு அருந்தும் போது நீர் பருகி உள்ளார் அப்போது நேற்று திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது இதை அறிந்த வழுதூர் தெற்கு காட்டூர் உடைசியார் வலசை, வாலாந்தரவை உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளைச் சார்ந்த உறவினர்கள் பொதுமக்கள் இவருக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செய்து வணங்கி நல்ல முறையில் ஆட்டம் பாட்டத்தோடு சிறப்பாக அடக்கம் செய்தனர்.

இன்றைய காலகட்டத்தில் உள்ள துரித உணவுகளால் 50 வயத கூட கடக்க முடியாத நிலையில் அந்த காலத்தில் உள்ள கம்பு, கேழ்வரகு, கோதுமை, மக்காச்சோளம், குதிரைவாலி, உள்ளிட்ட தானிய வகைகளை உணவில் சேர்த்து வந்ததால் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தார் ஆரோக்கியமான உணவு என்றும் நல்ல சுகாதாரமானது ஆரோக்கியமான வாழ்வை தரும் என்பதற்கு இவர் போன்ற வயதானவர்களின் வாழ்க்கையே ஒரு எடுத்துக்காட்டாகும் வழுதூர் கிராமத்தில் தற்போது 110 வயது வாழ்ந்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News