ராமநாதபுரம்: புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை துவக்கம்

ராமநாதபுர த்தில் புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

Update: 2024-02-05 02:00 GMT

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் புதிய வழித்தடத்திற்கான புதிய பேருந்து துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

ராமேஸ்வரத்திற்கு செல்வதற்கான புதிய பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேருந்து ராமநாதபுரத்திலிருந்து உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, வண்ணாங்குண்டு, பெரியபட்டிணம், முத்துப்பேட்டை, தாமரைக் குளம், புதுமடம், பிரப்பன் வலசை வழியாக சென்றடையும். அதேபோல் ராமேஸ்வரத்தில் இருந்து மேற்கண்ட ஊர்கள் வழியாக ராமநாதபுரம் வந்தடையும். இதுபோல் நாள் ஒன்றுக்கு நான்கு முறை இப்பேருந்து சென்று வரும். புதிதாக துவக்கி வைக்கப்பட்ட பேருந்தில் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன்  மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன , ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் , ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம்உள்ளிட்ட அரசு அலுவலர்கள் இப்பேருந்தில் பயணச்சீட்டு பெற்று பயணம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் சிங்காரவேலன் அவர்கள், போக்குவரத்துக்கழக கோட்ட மேலாளர் பத்மகுமார் அவர்கள், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர் பிரவீன் தங்கம் ஸ்டாலின் கமலக்கண்ணன் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News