ராமநாதபுரம் விளைந்த நெல்லை அறுக்க விடாமல் தொல்லை: விவசாயி வேதனை

ஒரு குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் விளைச்சல் அடைந்த நெற்கதிர்களை கூட அறுவடை செய்ய முடியாமல் உள்ள கொடூரம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அழுது புலம்பினார்.

Update: 2024-02-29 17:45 GMT

மனு அளிக்க வந்த குடும்பத்தினர்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்க கூட்டத்தில், குழந்தை குட்டிகளுடன் வந்த ஒரு குடும்பத்தினர், ஊராட்சி மன்ற தலைவரும் ஊர்க்காரர்காரர்களும் இணைந்து,  தங்களை கடந்த பல ஆண்டுகளாக ஊரில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் புறக்கணித்து வைத்துள்ளதாகவும்,

  கொடுமையின் உச்சமாக தங்களின் சொந்த விளைநிலத்தில் விளைந்த நெற்கதிர்களை கூட மற்ற வயல்களைக் கடந்து தங்களின் வயலுக்கு நெல் அறுவடை இயந்திரத்தை கூட வர அனுமதிக்காமல் வைத்துள்ளதால் நன்கு விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிர்களை கூட அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருகின்றோம் எனக் கூறி ஆட்சியர் அலுவலகத்தில் வந்து அழுது புலம்பி தவித்த ஒரு குடும்பத்தின் சோக நிகழ்வு பார்ப்போர் அனைவரையும் கண்கலங்க செய்தது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா வாகவயல் கிராமத்தைச் சேர்ந்த முனீஸ்வரி என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் வந்து முறையிட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்ற போது, இவர்களுடைய இடத்திற்கு அருகில் சாலை போட பணி நடந்தது சமயத்தில் நடந்த பிரச்சினை காரணமாக,

தொடர்ந்து இந்த ஒரு குடும்பத்தை மட்டும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், அங்கு நடக்கும் அனைத்து காரியங்களிலும் இந்த குடும்பத்தை புறக்கணித்து வைத்துள்ளதாகவும், இந்த ஆண்டு தங்கள் வயலில் விளைவிக்கப்பட்ட நெருப்பு பயிர்கள் நன்கு விளைச்சல் அடைந்து நல்ல பலனை தந்துள்ளது. ஆனால், இவர்களின் வயலுக்குச் செல்லும் பாதையில் முற்களை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாகவும், வீட்டிற்கு செல்லும் வழியில் கிராம மக்களை தூண்டிவிட்டு தகராறு செய்து இவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளதாகவும் புகார் தெரிவித்தார்.  மேலும், ஊராட்சி மன்ற தலைவர் சிலரை தூண்டிவிட்டு இந்த குடும்பத்தினர் குடி தண்ணீர் பிடிக்க  விடாமல் தடுப்பதாகவும், காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் செல்வாக்கை பயன்படுத்தி தங்களுக்கு நியாயம் கிடைக்க செய்வது இல்லை, பலமுறை புகார் கொடுத்தும் அரசு அதிகாரிகளும் தங்களுக்கு உரிய நீதியைப் பெற்றதரவில்லை என்று கூறும் அவர்கள்,  ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வந்து அழுது முறையிட்டனர்

.  மேலும், கொடுமையின் உச்சமாக தங்கள் விளைநிலத்தில் விளைந்த நெற்கதிர்களை கூட அறுவடை செய்ய அந்தப் பகுதிக்கு நெல் அறுவடை இயந்திரங்களை கூட வரவிடாமல் தடுத்து வருவதால் நெற்கள் அனைத்தும் வீணாகி வருகிறது. இதனால், தங்களின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி

தங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என ஆட்சியர் அலுவலக மேஜையில் தலை வைத்து அழுது புலம்பி தவித்த அந்த குடும்பத்தினருக்கு விடியா திமுக அரசு ஆட்சி நிர்வாகத்தில் நியாயம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags:    

Similar News