ராமநாதபுரம் முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

ராமநாதபுரம் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அரண்மனையில் நடைபெற்றது.

Update: 2024-02-25 13:32 GMT
ராமநாதபுரம் அதிமுக நகர் கழக செயலாளர் பால்பாண்டி தலைமையில முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு அரண்மனை முன்பு வைக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு அதிமுக மாநில மகளிரணி தலைவி கீர்த்திகாமுனியசாமி மலர்தூவி மறியாதை செய்தனர். பின்பு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரத்ததானம் வழங்கினர். பின்பு ஜெஸ்ட் ஏஞ்சலினா ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் ஸ்டாலின்ஜெயசந்திரன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News