ராமநாதபுரம் : மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
ராமநாதபுரத்தில் அதிமுக மாவட்ட இளைஞர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் அதிமுக இளைஞரணி சார்பில் இளைஞரணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இவ்விழாவில் அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி முன்னிலை வைத்தார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அதிமுக அமைப்புச் செயலாளர் ஏ. கே. சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும்போது இன்று திமுக ஆட்சியில் அனைத்து விலைவாசிகளும் உயர்ந்து விட்டன மின் கட்டணம் உயர்ந்துவிட்டது இலவச பஸ் திட்டம் என்று அறிவித்து போக்குவரத்து ஊழியர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து விட்டது. தேர்தல் வாக்குறிதியில் அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவருக்கும் மாதம் உரிமை தொகை ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு பின்பு தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே உரிமை தொகை வழங்கப்படும் என்று பொதுமக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்தது. மேலும் இந்த பொய்யான வாக்குறுதிகள் நீண்ட நாளைக்கு நிலைத்து நிற்காது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை உடனே சென்று பார்க்காமல் டெல்லியில் இருந்து இரண்டு நாட்கள் கழித்து வந்து அமைச்சர்களைவைத்து பார்க்கச் சொன்னார். மேலும் நிவாரண நிதியை தொடர்ந்து அதிகப்படியாக மக்களுக்கு வழங்காமல் தண்ணீரில் மூழ்கடித்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து விட்டார். மேலும் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக மாறிவிட்டது எம்எல்ஏ மகன் வீட்டில் வேலைக்கு வந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண்ணை கொடுமைப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது இதில் எப்படி சமத்துவம் மலரும் இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என்று கேள்வி எழுப்பிபேசினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.