ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலார்கள் போராட்டம்

ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற நல சங்கத்தின் சார்பில் போராட்டம் நடந்தது.

Update: 2023-12-04 13:48 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தலைவர் ராஜாராம் பாண்டியன் தலைமையில் அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்ற நலச் சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பாக போராட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு கோரிக்கையில் வலியுறுத்தப்பட்டது போக்குவரத்து களங்களில் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை அரசு வழங்க கோருதல் தொழிலாளர்களின் பணத்தில் பிடித்தம் செய்யப்படும் வகைகள் புதிய கணக்கிற்கு செலுத்தப்படுவதில்லை தொழிலாளர்கள் பணம் ரூபாய் 12000 கோடி நிர்வாகங்களால் செலவு செய்யப்பட்டு விட்டது.

இதே நிலை நீடித்தால் போக்குவரத்து கழகங்கள் இருப்பே கேள்விக் குறியாமாறிவிடும் மேலும் ஓய்வூதியத்திற்கு ஒப்பந்த பலன் அகவிலைப்படி ஊழியர்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்பது தனித்தொகை அல்லது ஓய்வூதியத்தின் ஒரு பகுதி ஓய்வு ஊதியத்திற்கு இரண்டு கால் என்றால் ஒரு கால் அடிப்படை பென்ஷன் வழங்கவேண்டும்.மேலும் 01.04.2003க்குப்பின்பு பணியில் சேர்ந்தோருக்கு ஓய்வூதியம் இதுனால் வரை வழங்கப்படவில்லை அதை உடனடியாக வழங்கப்பட வேண்டும் பணி ஓய்வு பெற்று மரணம் அடைந்த 4000 தொழிலாளர்களின் குடும்பங்கள் வீதியில் நிற்கின்றன.அவர்களுக்கு ரூ 90 ஆயிரம் பேருக்கு ஒய் ஊதியம் இல்லை எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை பாதுகாத்து அனைவருக்கும் வழங்க வேண்டும்.

போக்குவரத்து தொழிலாளர்கள் பணியின் போது மரணமடையும் தொழிலாளர்கள் குடும்பத்தை பாதுகாக்க வாரிசு வேலை மற்றும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகிறது இந்த ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தையை துவக்க எவ்வித அறிகுறியும் இல்லை கடந்த 2 இரண்டு ஒப்பந்தங்கள் உரிய காலத்தில் உருவாக்கப்படாததால் பல கோடி ரூபாய் தொழிலாளர்களுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் ராஜாராம் பாண்டியன் துணைத் தலைவர் (ஓய்வு) ,சி ஐ டி சங்க கிளை தலைவர் செந்தில்குமார், மனோகரன்,பெருமாள் சாமி சண்முகராஜா மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் உள்ளவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News