ராமநாதபுரம் இடியுடன் கூடிய கனமழை !
ராமேஸ்வரம் தீவு பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் ராமேஸ்வரம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-13 10:50 GMT
கனமழை
ராமேஸ்வரம் தீவு பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த இடியுடன் கூடிய கன மழை வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு வாகனத்தை இயக்கினர் தமிழ்நாட்டில் ஆறு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வளிமண்டல கீழடுக்குகளின் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்த நிலையில் இன்று காலை முதல் மதியம் வரை இராமேஸ்வரத்தில் வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்தது சுமார் 2 மணி அளவில் ராமேஸ்வரம் தீவு பகுதியில் பல்வேறு இடங்களில் பலத்த சூறைக்காற்று வீசியது அதன் பின் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்தை இடியுடன் கூடிய கனமழை பெய்தது சுற்றுலா பயணிகள் வாகனங்களை இயக்க முடியாமல் முகப்பு விளக்குகளை ஒளிர்பட்டவாறு ராமேஸ்வரம் திருக்கோவில் அருகே வாகனத்தை இயக்கி கடற்கரை சென்றனர் சுட்டரிக்கும் வெயிலில் தற்போது ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பல்வேறு இடங்களில் பலத்தை இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் ராமேஸ்வரம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.