ராமநாதபுரம் மங்கள விநாயகர் ஆலயத்தில் வருடாபிஷேகம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ மங்கள விநாயகர் ஆலயத்தில் 8 ம் ஆண்டு வருடாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2024-01-19 10:07 GMT


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ மங்கள விநாயகர் ஆலயத்தில் 8 ம் ஆண்டு வருடாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மங்கள விநாயகர் ஆலயம் சுமார் 40 வருடங்களுக்கு மேல் பழமையான கோவில் ஆகும். அதன் பகுதியில் சுற்றியுள்ள ஓம் சக்தி நகர், வசந்த நகர். பாரதி நகர். காட்டு ஊரணி, வைகை நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் விநாயகரை வழிபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அருள்மிகு ஸ்ரீ மங்கள விநாயகர் ஆலயத்தில் 8ம் ஆண்டு வருடாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் தை மாதம் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை வளர்பிறை நவமி திதியும், அஸ்வினி நட்சத்திரமும், அமிர்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் இன்று ஸ்ரீ மங்கள விநாயகர் ஆலயத்தில் மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், ம்ருதியுஞ்ச ஹோமம் நடைபெற்று தொடர்ந்து மஞ்சள், திரவியம், பால், தயிர், விபூதி என 16 வகையில் அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து ஸ்ரீ மங்கள விநாயகர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாவித்தார். மேலும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்திருந்த அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தால் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News